politics

img

அறிவியல் கதிர் - ரமணன்

1. நோபல் பரிசுகள்  சில தகவல்கள்

இந்த ஆண்டு வேதியியல்நோபல் பரிசைஇரண்டு பேருடன் இணைந்து பெற்றிருக்கும் 97 வயதானபி.குட்எனப்ஃ(B Goodenough)நோபல் பரிசு பெற்றவர்களில் அதிக வயதானவர்.இதற்கு முன்னால் ஆர்தர் ஆஷ்கின் தனது96ஆவது வயதில் இயற்பியலுக்கான நோபல் பரிசை 2018ஆம் ஆண்டு பெற்றார்.

வேதியியலில் நோபல் பரிசை இரண்டு முறை வென்றவர் பிரிட்டிஷ் உயிர் வேதியியலாளர்பிரடரிக் சாங்கர் மட்டுமே.1958ஆம் ஆண்டு புரதத்தின் கட்டமைப்பிற்காகவும்  1980இல்நியூக்கிளிக் அமிலத்தின் கட்டமைப்பு தொடர்பான ஆய்வுகளுக்கும் பரிசைப் பெற்றார்.

1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பியரி க்யூரி முதலில் வாங்க மறுத்தார்.அவருடைய மனைவியான மேரி க்யுரியுடன் சேர்ந்து ரேடியம் மற்றும் பொலோனியத்தைக் கண்டுபிடித்திருந்தார்.மேரிக்கும் இணைந்து வழங்கப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வேன் என்றார். இதனால்மேரி க்யூரி நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியானார். பிறகு1911இல்மேரி க்யூரிதனியாக வேதியியல் நோபல் பரிசையும் வென்றார்.

2. தேனீக்கள் அழிந்தால் 

லண்டனிலுள்ள ராயல் புவியியல் கழகத்தில் நடைபெற்ற விவாதத்தில் தேனீக்கள்தான் பூமியில் அதி முக்கியமான உயிரினம் என்று எர்த் வாட்ச் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.அதேசமயம் தேனீக்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி உலகில் தேனீக்கள்90 சதவீதம் அழிந்துவிட்டன. இதற்கான காரணங்கள் அந்தந்தப் பிரதேசங்களைப் பொறுத்து மாறினாலும் முக்கியமான காரணங்கள் பெருமளவு காடுகள் அழிப்பு,கூடு கட்டுவதற்கான பாதுகாப்பான இடம் இல்லாமை,பூக்கள் இல்லாமை,கட்டுப்பாடற்ற பூச்சிக்கொல்லிகள் உபயோகம், மண் தன்மை மாறுபடுதல் ஆகியவையே.உலகின் வேளாண்மை70சதவீதம் இந்தப் பூச்சிகளை சார்ந்து இருக்கிறது.அதாவது நமது உணவில் 70சதவீதம் தேனீக்களின் நடவடிக்கைகளால்தான் கிடைக்கின்றது. மகரந்த சேர்க்கையினால் உண்டாகும் காய் கனிகள் பல லட்சம் விலங்குகளுக்கும் உணவாகின்றன.அவை இல்லாவிட்டால் விலங்கினங்களும் அழிந்துவிடும்.தேன் உணவாக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்,சரும நன்மைக்கும் பயன்படுகின்றன.

தேனீ மட்டும்தான் ஃபங்கஸ் ,வைரஸ்,பேக்டீரியா போன்ற நோய் பரப்பும் கிருமிகளை சுமந்து வராத ஒரே உயிரினம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தேனீக்கள் அழிந்துவருவதற்கு காரணங்கள் பல சொல்லப்படுகின்றன.சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைபேசி பயன்படுத்தும்போது உண்டாகும் அலைகள் தேனீக்களை நிலைகுலையவைத்து திசை புரியாமல் தடுமாறவைக்கின்றன.டேனியல் ஃபவரேஎன்ற உயிரியல் ஆய்வாளர் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து83 சோதனைகள் செய்தார்.கைபேசிஅலைகள் உண்டாகும்போது தேனீக்கள் சாதாரணமாக எழுப்புவதை விட பத்து மடங்கு அதிக ஓசை எழுப்புகின்றன.இது தாங்கள் அபாயத்தில் இருப்பதாகவும் கூட்டைவிட்டு  வெளியேறுமாறு சொல்லும் சமிக்கையாகும்.. தேனீக்களின் அழிவை தடுக்க பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை குறைத்தால் போதாது; முற்றிலுமாக தடை செய்யவேண்டும்.இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவேண்டும்.தேனீக்களின் ஆரோக்கியம்,நலன்,பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிப்பதும் ஆய்வுகள் மேற்கொள்வதும் அவசியம்

(எம்.எஸ்.என் செய்திக் கட்டுரையின் சுருக்கம்)

 

3. சீனாவின் பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி  

பல ஆண்டு கட்டமைப்புக்கு பின் சீனாவின் புதிய ரேடியோ தொலைநோக்கி(radio telescope) செயல்பாட்டிற்கு வந்துள்ளது.ஃபாஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாகிய 305 மீட்டர் பரப்பு கொண்ட அரெசிபோ(Arecibo)வை விட இரண்டு மடங்கு சக்தியுடையது. 4450 தனித்தனி சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இதுதென்மேற்கு சீனாவில் டாவோடங் எனும் இயற்கைப் படுகையில் வைக்கப்பட்டுள்ளது.500 மீட்டர் டிஷைக் கொண்ட இது நிலையாக வைக்கப்பட்டிருப்பதால் வேண்டிய இடங்களை நோக்கி திருப்ப முடியாது. ஆனால் மிக நுட்பமான ஒலி கேட்கும் திறனுடையது மட்டுமல்ல, உலகிலே ஃபில்டு அபர்ச்சர் ரேடியோ தொலைநோக்கி(filled-aperture radio telescope.) வகையில் மிகப் பெரியதும் ஆகும்.ரசிய ரட்டன்-600 ரேடியோ தொலைநோக்கி வேறுவகைப்பட்டது.அதன் பரப்பு அதிகமாயினும் இதனளவு நுட்பமானதல்ல. 

பலவித வான் பொருட்களை ஆய்வு செய்ய ரேடியோ தொலைநோக்கி பயன்படுகிறது.ராட்சச நட்சத்திரங்கள் சிதையும்போது ஏற்படும் பல்சார் எனும் கதிர்வீச்சுக்களை பார்க்க முடியாது.ஆனால் ரேடியோ தொலைநோக்கி மூலம் கேட்க முடியும்.இந்தக் கதிர்வீச்சுக்களை கண்காணிப்பதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் போன்ற நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.வான்வெளியில் ஹைட்ரஜன் இருப்பு குறித்தும் மிகு ஆற்றல் இயற்பியல்,நட்சத்திரங்களின் பரிணாமம்,வான் வெளி  மண்டலங்களின் பரிணாம் ஆகியவை குறித்தும் இதன் மூலம் ஆய்வு செய்ய உள்ளனர்.  ஒரு இறுதி சோதனை முடிந்தபின் இந்த தொலைநோக்கியை உலகில் உள்ள எல்லா வானவியலாளர்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். ஏப்ரல் 2019இலிருந்து  சீன வான வியலாளர்கள் இதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மனித இனத்தின் பணிகளை முன்னேற்றுவதும் திறந்தவெளி வான் கொள்கையை பரப்புவதும் இந்த தொலைநோக்கியின் நம்பிக்கையாகும்.

(யுனிவெர்ஸ் டுடே இலிருந்து க்யுரியாசிட்டி டெய்லி போட்காஸ்ட் கட்டுரையின் சுருக்கம்)


 


 

;